ரணிலிடமிருந்து 60 கோடி ரூபாய் வாங்கிய சாணக்கியன்: அம்பலமாகிய உண்மை

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #sanakkiyan
Mayoorikka
11 months ago
ரணிலிடமிருந்து  60 கோடி ரூபாய் வாங்கிய சாணக்கியன்: அம்பலமாகிய உண்மை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தனிப்பட்ட முறையில் 60 கோடி ரூபாயைப் பெற்றுக்கொண்டுள்ளதாக ரெலோ அமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் குற்றஞ்சாட்டியுள்ளார். 

 எவ்வாறாயினும் குறித்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியே தமக்கு வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். தம்மால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளைக் கருத்திற்கொண்டு, வழங்கப்பட்ட அந்த நிதியில் தற்போது மாவட்டத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

 இந்த நிலையில் அரசியல் நோக்கத்திற்காகக் கோவிந்தன் கருணாகரம் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!