தேர்தலை புறக்கணிக்கக் கோரி யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரம்!
#SriLanka
#Jaffna
#Election
Mayoorikka
11 months ago

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி 14ஆம் திகதி புதன்கிழமையும் யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது.
புதன்கிழமை (14) பிற்பகல் யாழ்ப்பாணம் நகர் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் இந்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி மக்களுக்கு தமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



