சஜித்திற்கு ஆதரவு வழங்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் : உடன்படிக்கை கைச்சாத்து!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் உடன்படிக்கையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று (15.08) கைச்சாத்திட்டுள்ளார்.
இது தொடர்பான உடன்படிக்கையில் இன்று பிற்பகல் கொழும்பில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றில் ரிஷாத் பதியுதீன் மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
நேற்று (14) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அதியுயர் சபை கூடி இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர் அங்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.