பரீட்சை வினாத்தாளில் இடம் பிடித்த வைத்தியர் அர்ச்சுனா
#SriLanka
#doctor
#Examination
#Chavakachcheri
Prasu
1 year ago
இலங்கையில் மாகாண கல்வித் திணைக்களத்திற்கு உட்பட்ட வலய பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற பரீட்சையில் டாக்டர் அருச்சுனா தொடர்பில் வந்த வினாதாள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பாடசாலைகளில் இடம்பெற்ற இரண்டாம் தவணை பரீட்சை இடம்பெற்ற நிலையில் குடியியல் பாடத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் ஒன்றிலேயே இவ்வாறு மருத்துவர் அருச்சுனா பெயரில் கேள்வி இருந்துள்ளது.
அதாவது மாணவர்களிடம் கொடுக்கப்பட்ட அந்த பரீட்சை தாளில், டாக்டர் அர்ச்சுனா ஒளிப்பு மறைப்பு இன்றி மனதில் பட்டதை கூறினார்.
இங்கு ஒளிப்பு மறைப்பு என்ற இணைமொழி தரும் பொருள் என்ன என்பதே அந்த வினா ஆகும்.
குறித்த வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்ற நிலையில் இதன் உண்மைதன்மை உறுதிப்படுத்தமுடியாமல் உள்ளது.