ஜனாதிபதி தேர்தல் : 40 வேட்பாளர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
11 months ago

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 40 வேட்பாளர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிணைப் பணத்தை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஜூலை 26ஆம் திகதி ஆரம்பமாகி இன்று (1408) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தன.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது நாளை (15) காலை 9 மணி முதல் 11 மணி வரை தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது.
அதற்குள் தேர்தல்கள் ஆணைக்குழு அமைந்துள்ள சரண மாவத்தையை சூழவுள்ள பகுதி விசேட பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.



