வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் நாமல் ராஜபக்ஷ!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் நாமல் ராஜபக்ஷ!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்  நாமல் ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார். 

விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் வைத்து கையெழுத்திட்டுள்ளார். 

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய நாமல் ராஜபக்ஷவுக்கு இன்று (14) முற்பகல் பிணைப்பணம் செலுத்தப்பட்டது. 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் கட்சியால் முன்வைக்கப்பட வேண்டும் என்பதே அக்கட்சியில் உள்ள பலரது நிலைப்பாடாக இருந்தது.  

கட்சி தமக்கு வேட்புமனுவை வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வர்த்தகர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார். 

ஆனால் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக ஆகஸ்ட் 06ஆம் திகதி செய்திகள் வெளியாகின. 

இதன்படி, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக திரு நாமல் ராஜபக்ஷவின் பெயர் ஆகஸ்ட் 7 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!