ஆசன வெற்றிடங்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிப்பு!
#SriLanka
#Parliament
Mayoorikka
1 year ago
பாராளுமன்ற உறுப்பினர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் ஆசனங்கள் இரத்து செய்யப்பட்டதன் காரணமாக வெற்றிடமான இரண்டு ஆசனங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
1981 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 64(1) மற்றும் 64(5) ஆகிய பிரிவுகளின் பிரகாரம் இரண்டு வெற்றிடங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன எழுத்து மூலம் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கு அறிவித்துள்ளார்.
காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார மற்றும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவதற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தீர்மானம் சட்ட ரீதியாக செல்லுபடியாகும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.