ஜனாதிபதி தேர்தல் : கிராம உத்தியோகத்தர் சங்கங்களின் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
ஜனாதிபதி தேர்தல் :  கிராம உத்தியோகத்தர் சங்கங்களின் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சகல வேலைகளையும் எவ்வித பிரச்சினையுமின்றி மேற்கொள்வதற்கு கிராம உத்தியோகத்தர் சங்கங்களின் கூட்டமைப்பு முன்னர் இணக்கம் தெரிவித்திருந்த போதிலும், அவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

கிராம உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையினால் ஜனாதிபதித் தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்  ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவிடம் நடத்திய விசாரணையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

எவ்வாறாயினும், இன்று (12.08) மற்றும் நாளை (13.08) அவர்கள் சகல கடமைகளில் இருந்தும் விலகிக் கொள்வதுடன், நாடு தழுவிய ரீதியில் ஒரு வார காலப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கிராம சேவையாளர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

வர்த்தமானி கிராம உத்தியோகத்தர் சேவை அரசியலமைப்பில் தமது முன்மொழிவுகள் உள்ளடக்கப்படாத காரணத்தினால் தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக கூட்டமைப்பின் இணைத் தலைவர்  நந்தன ரணசிங்க தெரிவித்தார். 

இன்று காலை பொதுநிர்வாக அமைச்சுக்கு முன்பாக மௌன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!