நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் பலி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் பலி!

நாட்டின் பல பகுதிகளில் நேற்று (10.08) இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோமாகம - கொட்டாவ பழைய வீதியின் வளவ சந்தியில் முச்சக்கரவண்டி ஒன்று காருடன் மோதியதில் முச்சக்கர வண்டியின் சாரதியான 41 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார். 

இதேவேளை, யாழ்ப்பாணம் - கண்டி வீதியின் கீழ் புலகல பகுதியில் முச்சக்கர வண்டியொன்று எதிர் திசையில் இருந்து வந்த கெப் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

 இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் பின்னால் பயணித்த நபரும் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சிகிச்சை பெற்று வந்த முச்சக்கரவண்டி சாரதியும் உயிரிழந்துள்ளார்.  உயிரிழந்தவர் கிதுல்ஹிதியாவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர். 

இதேவேளை, வரகாபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பேபுஸ்ஸ - அலவ்வ வீதியின் துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!