தேர்தல் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு நாளைய தினம் அறிவிக்கப்படும்!
#SriLanka
#Election
#IlankaThamilarasukKadsi
Mayoorikka
1 year ago
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு நாளையதினம் அறிவிக்கப்படும் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாளை ஞாயிற்றுக்கிழமை கட்சியின் மத்திய குழு கூடி ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்ளவுள்ளது. அதன் பின்னரே கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் அறிவிக்கப்படும்.
இந்நிலையில், கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுக்க முன்னர் கட்சியின் உறுப்பினர் பொது வேட்பாளராக போட்டியிட தீர்மானித்த விடயம் தொடர்பில் அக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் எனத் தெரிவித்த அவர் பொது வேட்பாளராக அரியநேத்திரன் அறிவிக்கப்பட்ட பின்னர் என்னை வந்து சந்தித்து விடயத்தை தெரியப்படுத்தி சென்றுள்ளார் என்றும் தெரிவித்தார்.