ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குகின்றார் மற்றுமொரு தமிழ் வேட்பாளர்!
#SriLanka
#Election
Mayoorikka
1 year ago
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நுவரெலிய மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் களமிறங்குகின்றார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் இன்று செலுத்தப்பட்டுள்ளது. தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் மலையக மக்கள் குறித்து கவனம் செலுத்தவில்லை என நுவரெலிய மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவிக்கின்றார்.
மலையக மக்களின் பிரச்சினைகளை வெளிகொணரும் வகையிலேயே தான் இந்த தேர்தலில் போட்டியிட எண்ணியதாக அவர் கூறுகின்றார்.