ஒக்டோபர் முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கள்!
#SriLanka
#Passport
Mayoorikka
1 year ago
ஒக்டோபர் மாதம் முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இதுவரை வழங்கப்பட்ட கடவுச்சீட்டுக்களில் 23வீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
மற்ற கடவுச்சீட்டுக்கள் வாங்கப்பட்டன, ஆனால் பயன்படுத்தப்படவில்லை.
இந்த இரண்டு மாதத்திற்கான கடவுச்சீட்டை அவசியமானால் மட்டுமே பெற்றுக்கொள்ளுமாறு மக்களை கேட்டுக்கொள்கின்றேன். இல்லையெனில், ஒக்டோபரில் புதிய கடவுச்சீட்டை பெறுவீர்கள் என்றார்.