அநுர குமாரவை சந்தித்த வேலையற்ற பட்டதாரிகள்!
#SriLanka
#AnuraKumaraDissanayake
Mayoorikka
1 year ago
நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வேலையற்ற பட்டதாரிகள் சிலர் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமாக அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தனர்.
இந்த சந்திப்பு மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை (08) இடம்பெற்றது.
இதன்போது வேலையில்லா பட்டதாரிகள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், இதுவரையில் வேலையில்லாத பட்டதாரிகள் எதிர்கொள்கின்ற சிக்கல்கள் குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.