வரலாற்று புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம் இன்று!
#SriLanka
#Festival
#Nallur
Mayoorikka
1 year ago
வரலாற்று புகழ்பெற்ற யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று (09) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இன்று காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.

18 ஆம் திகதி மஞ்சமும் 31 ஆம் திகதி சப்பரமும் செப்டம்பர் 1 ஆம் திகதி தேர்த் திருவிழாவும் செப்டம்பர் 2 ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் மாலை கொடியிறக்கமும் நடைபெறும்.
செப்டம்பர் 3 ஆம் திகதி பூங்காவனமும் செப்டம்பர் 4 ஆம் திகதி வைரவர் உற்சவத்துடனும் மஹோற்சவம் நிறைவுக்கு வரும்.