மன்னார் சதோச மனித புதை குழி பகுதியை Scan பரிசோதனை செய்ய தீர்மானம்

#SriLanka
Mayoorikka
1 year ago
மன்னார் சதோச மனித புதை குழி பகுதியை Scan பரிசோதனை செய்ய தீர்மானம்

மன்னார் "சதோச" மனித புதை குழி தொடர்பிலான வழக்கு இன்றைய தினம் புதன் கிழமை (7)மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் கலந்துரையாடல் வடிவில் குறித்த வழக்கு விவாதிக்கப்பட்டது.

 இதன் போது அகழ்வுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஸ,பேராசிரியர் ராஜ்சோம தேவ்,காணாமல் போனோர் சங்க பிரதிநிதிகள்,OMP அலுவளக பிரதிநிதிகள் உள்ளடங்கியோர் கலந்து கொண்டனர்.

 இதன் போது நீதி மன்றத்தால் பல்வேறு கட்டளைகள் ஆக்கப்படிருந்தது குறிப்பாக பேராசிரியர் ராஜ்சோம தேவ் தலைமையில் சதோச மனிதபுதைகுழி பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஸ்கான் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், சதோச மனித புதை குழியில் மீட்கப்பட்ட என்புகள் மற்றும் பிர பொருள் மாதிரிகளை வெவ் வேறாக பிரிப்பாதற்கான தீர்மானமும் அத்துடன் என்புகளை பால் வயது மரணத்திற்கான காரணம் தொடர்பில் ஆரய்வதற்கான செய்ற்பாடுகளை முன்னெடுக்குமாறும் அதே நேரம் ஏனைய சான்று பொருட்களை பேரசிரியர் ராஜ் சோம தேவிடம் கையளிக்குமாறும் கட்டளை அக்கப்பட்டது.

 குறித்த வழக்கு மேலதிக விசாரனைகளுக்காக அக்டோபர் மாதம் திகதியிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!