வவுனியாவில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் ஆசிரியர்!
#SriLanka
#Vavuniya
Mayoorikka
1 year ago
வவுனியா நெளுக்குளம் பாலாமைக்கல் பகுதியில் தோட்டக்காணி ஒன்றின் கிணற்றினுள் இன்று காலை சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
வேப்பங்குளம் 60 ஏக்கர் பகுதியை சேர்ந்த வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கும் ஆசிரியரான கிருஷன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இது தொடர்பான மேலதிக விசாரனைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர் என்பதுடன் அண்மைக்காலமாக தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது
