பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? வெளியாகவுள்ள தகவல்

#SriLanka #Election #SLPP
Mayoorikka
11 months ago
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? வெளியாகவுள்ள தகவல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இது தொடர்பான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

 இதன்படி பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அங்கத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

 இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பான தீர்மானத்தை தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று அறிவிக்கவுள்ளது. இன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செய்தியாளர் சந்திப்பில் வைத்து இந்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.

 இந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இணைத்தலைவர்களான பழனி திகாம்பரம் மற்றும் வேலுசாமி இராதாகிருஸ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!