புகையிரத சேவைகள் இரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
புகையிரத சேவைகள் இரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்பு!

தெமட்டகொட புகையிரத நிலைய ஊழியர்கள் தமது கடமைகளை விட்டுச் சென்றமையினால் புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளன. 

இதன் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் புகையிரதங்களின் தாமதங்கள் மற்றும் இரத்துச் செய்யப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

தெமட்டகொட ரேஸ்வே ஊழியர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து பணியிலிருந்து விலகியுள்ளனர். 

இதன் காரணமாக காலை கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை இயக்கப்படவிருந்த பொடி மெனிகே புகையிரதம் மற்றும் பதுளை ஒடிசி ஆகிய ரயில்களை இதுவரையில் இயக்க முடியவில்லை என புகையிரத போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் திரு.என்.ஜே.இடிபோலகே தெரிவித்தார்.  

தற்போதைய நிலைமை காரணமாக பல புகையிரத பயணங்களை இரத்து செய்ய வேண்டியுள்ளதாகவும் திரு.இடிபொலகே குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!