ஜனாதிபதி தேர்தலுக்கான ஊடக வழிகாட்டுதல்கள் வெளியீடு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
11 months ago
ஜனாதிபதி தேர்தலுக்கான ஊடக வழிகாட்டுதல்கள் வெளியீடு!

ஜனாதிபதி தேர்தலுக்கான ஊடக வழிகாட்டுதல்களை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஜனாதிபதித் தேர்தலின் போது செய்தி அறிக்கையிடல், பிற அறிக்கையிடல் நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் பிரச்சாரங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இதன்படி, ஊடக உப நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கும் பரிந்துரைகளை வழங்குவதற்கும் பிரதிநிதிகள் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மின்னணு ஊடக நிறுவனங்கள், இணைய தளங்கள் மற்றும் சமூக ஊடக இணையதள நிர்வாகிகள் மற்றும் அச்சு ஊடகங்களுக்கு தனித்தனியாக ஊடக துணை நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலத்தை எதிர்வரும் 9ஆம் திகதி நள்ளிரவு வரை நீடிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மேலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை மாவட்ட மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் பெற்றுக் கொள்வதற்காக தனியான பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!