ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை நியமிக்கும் தீர்மானம் மஹிந்தவுக்கு இல்லை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை நியமிக்கும் தீர்மானம் மஹிந்தவுக்கு இல்லை!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை நியமிக்கும் தீர்மானம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிடிக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் மேற்படி தெரிவித்துள்ளார்.

கட்சிக்குள் மகிந்த ராஜபக்ச நடத்திய கலந்துரையாடல்களில் நாங்கள் கலந்து கொண்டோம். 

இன்றும் அரசியல் சபைக் கூட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் பொஹொட்டுவவைச் சேர்ந்த 30 எம்.பி.க்கள் மகிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடிய போது நான் முற்றாக எதிர்க்கிறேன், நாங்கள் ரணிலுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார். 

அதனால் தான் அவர் நடத்தும் நிகழ்ச்சியில், கட்சி வேட்பாளரை முன்வைக்க மாட்டோம் என்று கூறினார்.  நான் மட்டுமல்ல, 29 பேர் சாட்சியம் அளிக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!