இலங்கையில் பயன்பாட்டில் உள்ள வாகனங்கள் தரமற்றவை : இராஜாங்க அமைச்சர்!

இலங்கையில் வருடாந்தம் நடத்தப்படும் வாகன புகை பரிசோதனையில் 20 வீதமான வாகனங்கள் தோல்வியடைவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
குறித்த வாகனங்கள் தரமானதாக இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (05.08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துவெளியிட்ட அவர், வாகன புகைப்பரிசோதனை சான்றிதழை பெற்றுக்கொள்வதோடு, வாகன அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி போன்றவற்றையும் அதே இடத்தில் பெற்றுக்கொள்வதற்கு தேவையான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என குறிப்பிட்டார்.
“இன்று வாகன உரிமையாளர்கள் மாசு உமிழ்வு சான்றிதழ் பெறவும், மோட்டார் வாகன உரிமம் பெறவும் மண்டலச் செயலர் அலுவலகம் செல்ல வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்.
இந்த மூன்று இடங்கள் மற்றும் மூன்று சான்றிதழைப் பெறுவதற்கு இப்போது நாங்கள் அந்த இடத்திற்குச் சென்ற பிறகு, இன்சூரன்ஸ் மற்றும் வாகன உரிமத்தைப் பெறுவதற்கு ஒரு திட்டம் தேவைப்படுகிறது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



