டயனா கமகேவிற்கு எதிரான மனு மீதான விசாரணை நிராகரிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் இன்று (05.08) தீர்ப்பளித்துள்ளது.
பிரிதி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்பிறகு, பெரும்பான்மையான நீதிபதிகளின் உடன்பாட்டின் அடிப்படையில் மனுவை தள்ளுபடி செய்ய 3 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது.
வெலிகம முன்னாள் மேயர் ரெஹான் ஜெயவிக்ரமவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது