ஜனாதிபதி தேர்தல் : சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தயாசிறி ஜயசேகர தீர்மானம்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (03.08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான திலங்க சுமதிபால மற்றும் ரோஹன லக்ஷ்மன் பியதாச ஆகியோர் திரண்டிருந்தனர்.
அங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, புதிய குழுவொன்றுக்கு நாட்டைக் கையளிக்க வேண்டுமாயின் ஐக்கிய மக்கள் சக்திக் கூட்டமைப்பில் பல பலமான தலைவர்கள் உள்ளனர்.
அவர்களுடன் இணைந்து இந்தப் பயணத்தைத் தொடர வேண்டும் என நம்புகின்றோம். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எங்களுடையது என்ற நிலைப்பாட்டை வைத்துக்கொண்டு தனியான தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.



