கொழும்பு மாநகர சபைக்கு 90 மில்லியன் ரூபாய் நட்டம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
11 months ago

கொழும்பு நகரில் வாகனங்களை நிறுத்துவதற்காக தானியங்கி முறையில் பணம் வசூலித்த நிறுவனம் 90 மில்லியன் ரூபாவை கொழும்பு மாநகர சபைக்கு செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டு இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து திணைக்கள பிரதி பணிப்பாளர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார்.
இத்திட்டத்தின் குறைபாடுகள் காரணமாக அடுத்த வருடத்திற்குள் புதிய இலத்திரனியல் முறைமை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.



