இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
150,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் இலஞ்ச குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹாபாகே காவற்துறையின் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
உஸ்வதகேயாவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஐஸ் விற்பனை செய்ததாக நீதி நடவடிக்கையில் உள்ளடக்கி அந்த பெயர் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், பொலிசார் முறையாக வந்து முறைப்பாட்டாளரின் வீட்டை சோதனை செய்யவில்லை எனவும், முறைப்பாட்டாளர் இனிமேல் பிரச்சனையின்றி வாழுமாறு கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.