யாழ்ப்பாண மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு! ஜனாதிபதி திறந்து வைப்பு

#SriLanka #Jaffna
Mayoorikka
11 months ago
யாழ்ப்பாண மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு! ஜனாதிபதி திறந்து வைப்பு

யாழ்ப்பாண மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு மக்களுக்கு சிறந்த குடிநீர் விநியோகத்தை வழங்கும் நோக்கோடு வடமராட்சி கிழக்கு தாளையடியில் NWSDP திட்டத்தின் கீழ் கடல் நீரை நன்னீராக சுத்திகரிக்கும் சுத்திகரிப்பு நிலையத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று திறந்து வைத்தார்.

images/content-image/2024/07/1722592813.jpg

 குறித்த நிகழ்வுக்கு உலங்குவானூர்தி மூலம் தாளையடியில் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்படிருந்த மைதானத்தில் வருகைதந்த ஜனாதிபதிக்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொன்னாடை போர்த்தி சிறப்பு கௌரவமளித்து வரவேற்பளித்தார்.

images/content-image/2024/07/1722592831.jpg

 இதையடுத்து நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட இடத்துக்கு சென்றடைந்த ஜனாதிபதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நீர்ப்பாசன மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரது பிரசன்னத்துடன் குறித்த திட்டத்தை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!