திடீரென சரத் பொன்சேகாவை சந்தித்த அமெரிக்க தூதர் ஜூலி சுங்!
#SriLanka
#Sarath Fonseka
#United States Ambassador to Sri Lanka
Mayoorikka
11 months ago

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங்கிற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இன்று(02) இடம்பெற்றது.
குறித்த சந்திப்பு தொடர்பில் அமெரிக்க தூதர் தனது எக்ஸ் பக்கத்தில், 'பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சந்திப்பதில் மகிழ்ச்சி.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார சூழல் குறித்து நாங்கள் விவாதித்தோம்' என குறிப்பிட்டுள்ளார்.



