பொதுஜன பெரமுனவின் முக்கிய கூட்டம் இன்று!
#SriLanka
#Mahinda Rajapaksa
Mayoorikka
1 year ago
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் தென்னிலங்கை கட்சிகள் தமது வேட்பாளர் தொடர்பில் பல்வேறுபட்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறானதொரு நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக பொதுஜன பெரமுனவின் நிர்வாக சபையின் விசேட கூட்டம் இன்றையதினம்(29) பிற்பகல் நடைபெறவுள்ளது.
கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.