டித்வா அனர்த்தத்தினால் இலங்கையில் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் உடமைகள் சேதம்!
கடந்த நவம்பர் மாத இறுதியில் இலங்கையை தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் கட்டிடங்கள், சொத்துக்கள், விவசாயம், உட்கட்டமைப்புகள் உள்ளிட்ட சேதத்தின் மதிப்பு சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் (USD) என உலக வங்கி குழுமத்தின் Global Rapid Post-Disaster Damage Estimation (GRADE) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேதம் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) சுமார் 4 சதவீதத்திற்கு சமமானதாகும். இலங்கையின் சமீப வரலாற்றில் மிகவும் தீவிரமான மற்றும் அழிவுகரமான சூறாவளிகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘டித்வா’ சூறாவளியால், நாட்டின் 25 மாவட்டங்களிலும் 5 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 20 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக வாழ்வாதாரங்கள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் தேசிய பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த GRADE அறிக்கை, அவசர நிவாரண நடவடிக்கைகள், மீட்பு திட்டமிடல் மற்றும் நீண்டகால பேரிடர் அபாயக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு வழிகாட்டும் முக்கிய தகவல்களை வழங்குகிறது.
இது உலக வங்கியின் விரைவான, தொலைநிலை மற்றும் மாதிரி அடிப்படையிலான மதிப்பீட்டு முறையை பயன்படுத்தி, கட்டடங்கள், விவசாயம் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட நேரடி பொருளாதார சேதங்களை கணக்கிட்டுள்ளது.
எனினும், வருமான இழப்புகள், உற்பத்தி இழப்புகள் அல்லது முழுமையான மீள் கட்டுமான செலவுகள் இதில் சேர்க்கப்படவில்லை.
(வீடியோ இங்கே )
அனுசரணை
