வர்த்தமானியை இரத்து செய்தமைக்கு எதிராக ஹட்டன் நகரில் ஒன்றுக்கூடிய தொழிலாளர்கள்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்துச் செய்தமைக்கு எதிராக ஹட்டன் நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கலந்துகொண்டதுடன், அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வாகனங்களில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் எம்.பி., தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து தோட்டத் தொழிலாளர் சமூகத்தை அரசாங்கம் தவறாக வழிநடத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.