இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 13 டெங்கு மரணங்கள் பதிவு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
11 months ago

இந்த வருடத்தில் 13 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அந்த காலப்பகுதியில் 32,183 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, 12,786 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 7,585 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், கம்பஹா மாவட்டத்தில் 3,452 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வடமாகாணத்தில் 4,589 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் 4,020 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் சப்ரகமுவ மாகாணத்தில் இந்த வருடம் 3,329 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.



