மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்க போட்டி ஆரம்பம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
11 months ago

இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கம் வடமாகாணம் ஏற்பாட்டில் மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்க போட்டி இன்று (27.07) காலை 8.30மணியளவில் கிளி/பளை மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)மற்றும் கிளி/பளை இந்து ஆரம்ப பாடசாலைகளில் ஆரம்பமாகியிருந்தது.
குறித்த போட்டியானது இன்றும் நாளையும் (28) இடம்பெறவுள்ளதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலை சதுரங்க விளையாட்டு வீரர் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை இறுதி போட்டி நாளை (28.07) இடம்பெறவுள்ளதுடன், பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது.



