கோட்டாபயவிற்கு உதவி செய்ய தயாராக இருந்தேன் : இளைஞர்களின் கேள்விக்கு ரணில் பதில்!
#Ranil wickremesinghe
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
11 months ago

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்ததாகவும், தேவைப்பட்டால் உதவி செய்வதாகவும் உறுதியளித்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (26.7) பிற்பகல் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட #AskRanilLive என்ற கேள்வி கேட்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.



