பாணின் விலையை குறைக்காதவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க தயார்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
பாணின் விலையை குறைக்காதவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க தயார்!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சோதனைகளை மேற்கொள்ளுமாறு புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் உடுவர குறிப்பிட்டுள்ளார்.  

இதேவேளை, ஜனவரி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் சட்டப்படியான எடை மற்றும் அளவீட்டு உபகரணங்களை சோதனையிட்டதில் 210 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட உதவி அளவீட்டு அலகு தர நிர்ணய சேவை அத்தியட்சகர் தில்ருக் பட்டியாபொல தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!