ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு!
#SriLanka
#M. A. Sumanthiran
#IlankaThamilarasukKadsi
Mayoorikka
1 year ago
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசு கட்சி வேட்பாளரை நியமிக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் முக்கிய வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்கு பல தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் அண்மையில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.