ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை: பிரதமர்
#SriLanka
#Sri Lanka President
Mayoorikka
1 year ago
நடைமுறை சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (26) பாராளுமன்றில் விசேட அறிவிப்பொன்றை விடுத்து இதை தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் பொலிஸ்மா அதிபர் பதவி வெற்றிடமாகவில்லையென்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்க வேட்பாளராகக் களமிறங்குவாரெனில் அரசியலமைப்பிற்கமைய அவரால் பதில் பொலிஸ்மா அதிபரொருவரை நியமிக்க முடியாதென்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.