வரலாற்று சாதனை படைத்த வவுனியா நெடுங்கேணியை சேர்ந்த குத்துச்சண்டை வீரன்

#SriLanka #Vavuniya
Lanka4
11 months ago
வரலாற்று சாதனை படைத்த வவுனியா நெடுங்கேணியை சேர்ந்த குத்துச்சண்டை வீரன்

48வது தேசிய மட்ட விளையாட்டு போட்டி கொழும்பில் இடம்பெற்றது. இதில் குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்தை பிரதிநிதிப்படுத்தி முதன்முறையாக தங்கப்பதக்கத்தை பெற்று வவுனியா நெடுங்கேணியை சேர்ந்த முத்தையா கிரிதரன் என்ற இளைஞன் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

குறித்த குத்துச்சண்டை போட்டியானது கொழும்பு றொறின்ரன் உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றிருந்தது.

இதில் 63.5 தொடக்கம் 67 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்டே குறித்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதேவேளை வடமாகாண தலைமை பயிறுவிப்பாளர் மு.நிக்சன் ரூபராஜ் தலைமையிலான அணியினர் ஒரு தங்கம், 02 வெள்ளி 05வெண்கலப்பதக்கத்தை பெற்றுக்கெண்டனர்.

இதில் குறித்த பயிற்றுவிப்பாளரின் பயிற்சியின் கீழான வவுனியா மாவட்ட குத்துச்சண்டை அணியினர் 01 தங்கம் மற்றும் 03 வெண்கலப்பதக்கத்தினை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!