கிளிநொச்சி மாவட்ட திட்ட மீளாய்வு கூட்டம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது!
#SriLanka
#Douglas Devananda
#Kilinochchi
Lanka4
11 months ago

கிளிநொச்சி மாவட்ட திட்ட மீளாய்வு கூட்டம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் குறித்த கூட்டம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 9.30 மணிக்கு ஆரம்பமானது.
இதன்போது, ஏற்கனவே திட்டமிடப்பட்டு அனுமதிக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் தடைகள் தொடர்பில் ஆராயப்படுகிறது.
அத்துடன், பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை தீர்த்து வைக்கும் வகையில் இன்று உத்தியோகத்தர்களுடன் கலந்துரை பாடப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



