பாராளுமன்ற அவை நடவடிக்கைகள் ஆரம்பம் : பொது நிதி முகாமைத்துவம் தொடர்பில் விவாதம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
11 months ago

பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொது நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார மாற்றம் தொடர்பான சட்டமூலங்கள் மீதான இரண்டாம் வாசிப்பு இன்று (25.07) விவாதிக்கப்படவுள்ளது.
இதுதொடர்பான விவாதம் இன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விவாதத்திற்கு கூடுதல் அவகாசம் அளிக்கும் வகையில், இன்று வாய்மொழி பதில் தேவைப்படும் கேள்விகள் மற்றும் ஒத்திவைப்பு நேரத்தில் கேள்விகளை பரிசீலிக்க வேண்டாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார மாற்ற சட்டமூலங்களின் இரண்டாம் வாசிப்பின் பின்னர் இது நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.



