பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம்!
#SriLanka
#prices
#Import
Mayoorikka
11 months ago

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை பரிசோதித்து வெளியிடுவதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படுவதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
40 அடி கொள்கலனில் பல வகையான பொருட்களை இறக்குமதி செய்யும் போக்கு அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் துறைமுக அதிகார சபையுடன் தொடர்புடைய சுமார் 20,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



