சுற்றுலா வர்த்தகத்தில் இணையுமாறு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு
#SriLanka
#Tourism
Mayoorikka
11 months ago

மத்திய கிழக்கு நாடுகள் உட்பட இலங்கைத் தொழிலாளர்கள் அனுப்பப்படும் நாடுகளின் சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டுக்கு வரவழைக்கும் புதிய வர்த்தக வாய்ப்புகள் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் கவனம் செலுத்தினால், அவர்களுக்குத் தேவையான வசதிகளை சுற்றுலா அமைச்சின் ஊடாக வழங்க முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
குருணாகல் எபிடோம் ஹோட்டல் வளாகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற 'அபிமன் 2024' நிகழ்வில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களைப் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை ஜனாதிபதி இதன்போது வழங்கி வைத்தார்.



