இலங்கையில் குறைவடையும் முட்டையின் விலை!
#SriLanka
#Prison
#Egg
#Lanka4
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
4 hours ago

இந்த வாரம் முட்டை விலையை இரண்டு ரூபாவால் குறைக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, சிவப்பு முட்டையின் விலை 29 ரூபாவாகவும் வெள்ளை முட்டையின் விலை 27 ரூபாவாகவும் என முட்டை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக, இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கோழிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையே இதற்கு காரணமெனவும், இருப்பினும், சிறு அளவிலான முட்டை உற்பத்தியாளர்கள் தங்களது தொழிலை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



