60 நாட்கள் முடிந்தன: ஈரான்–அமெரிக்கா உறவில் புதிய பதற்றம்!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளதாக வெளியாகும் தகவல்களுக்கு மத்தியில், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவுடன் நிரந்தர அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்தால், தனது இராணுவத்தை “முழுமையான தாக்குதல்” நிலைக்கு மாற்ற ஈரான் தயாராக இருப்பதாக அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தூதரக முயற்சிகள் முற்றாகத் தோல்வியடையும் பட்சத்தில், அமெரிக்காவின் கடல்சார் நடவடிக்கைகளை எதிர்கொள்ள இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜூன் 17ஆம் திகதி எட்டப்பட்டதாகக் கூறப்படும் தற்காலிக ஒப்பந்தத்தின் 60 நாள் காலக்கெடு தற்போது நிறைவடைந்துள்ளமை பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பான முரண்பாடு இரு தரப்புக்கும் இடையிலான முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணை தொடர்பான பதற்றம் நீடிப்பதால் சர்வதேச எண்ணெய் சந்தையிலும் தாக்கம் ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதற்கிடையில், பாப் அல்-மண்டெப் நீரிணைப் பகுதியில் ஹவுதி அமைப்பினரின் நடவடிக்கைகளும் மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதனால் ஈரான்–அமெரிக்கா இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளும் ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள முன்னேற்றங்களும் சர்வதேச அளவில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே