தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக கால் பதிக்கும் ஈழத்து வேடன்

#India #Cinema #Tamil Nadu #Music
Lanka4
6 hours ago
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக கால் பதிக்கும் ஈழத்து வேடன்

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட வேடன், மலையாள கலைத்துறையில் பிரபலமான ராப் இசைப் பாடகராக திகழ்ந்து வருகின்றார். அவரின் பாடல்கள், சாதி மற்றும் நிற ஒடுக்குமுறைக்கு எதிரானதாக மேலோங்க இன,மதமின்றி பலகோடி இரசிகர்களை வசப்படுத்தினார்.

 மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தில், 'குத்தந்திரம்' பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர் வேடன். சமீபத்தில் டோவினோ தாமஸ், சேரன் நடிப்பில் வெளியான 'நரிவேட்டை' படத்தில் 'வாடா வேடா' என்ற பாடலை வேடன் எழுதி பாடியிருந்தார். அந்தப் பாடலும் அனைவரிடத்திலும் சிறந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்த நிலையில் இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் புதிய திரைப்படத்தில் ராப் பாடகர் வேடன் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகின்றார். விஜய் மில்டன் இயக்கி வரும் குறித்த திரைப்படத்தில் பரத், சுனில், ஆரி அர்ஜுனன், பால் டப்பா, அம்மு அபிராமி, கிஷோர் டிஎஸ், விஜேதா, பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

 தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் பெயர் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் ஈழத்து வேடன் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார் என படக்குழு அறிவித்துள்ளது.

 அவரது இரசிகர்கள் பலரையும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன் இரசிகர்கள் மத்தியில் குறித்த படம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிடலாம்.

 திரையுலகில் கால் பதிக்கும் ஈழத்து வேடம் சமீபத்தில் ராப் பாடகராக பிரபலமான ஈழத்து வேடன் என்று அழக்கப்படும் கிரன்தாஸ் முரளி, தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1752653682.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!