4,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் ''ராமாயணம்'' திரைப்படம்

நிதேஷ் திவாரியின் 'ராமாயணம்' இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படம் என்ற சாதனையை பெற்றிருக்கிறது.
அதன்படி, இரண்டு பாகங்களையும் சேர்த்து ரூ. 4,000 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இது ''கல்கி 2898 ஏடி'', '' ஆர்.ஆர்.ஆரை'' விட 8 மடங்கு அதிகம் ஆகும்.
ரன்பீர் கபூர், யாஷ் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் இந்தப் படம், உலகத் தரம் வாய்ந்த விஎப்எக்ஸ், ஏஐ டப்பிங் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரின் இசையுடன் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
முன்னதாக, இப்படத்தின் பட்ஜெட் சுமார் ரூ. 1,600 கோடி இருக்கும் என்று ஊகிக்கப்பட்டநிலையில், தற்போது படத்திற்கு நெருக்கமான ஒருவர் செலவு ரூ. 4,000 கோடியை நெருங்கி உள்ளதாகவும், இது இந்தியாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றாக இருப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இப்படத்தின் முதல் பாகத்தை அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் 2027-ல் தீபாவளிக்கு வெளியாகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



