விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கொழும்பில் கைது!
#SriLanka
#Arrest
#Police
#Lanka4
#SHELVAFLY
Mayoorikka
3 hours ago

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சற்று முன்னர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான ரமேஷ் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொடை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில்இவரை கிரிபத்கொடை புதிய வீதியில் வைத்து காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
அவரிடம் இருந்து T- 56 ரக துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. திட்டமிட்ட குற்றச் செயல் ஒன்றை மேற்கொள்ளும் நோக்குடன் குறித்த நபர் துப்பாக்கியொன்றைத் தம் வசம் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



