பேருந்தில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர்: சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதி
#SriLanka
#Accident
#Hospital
Mayoorikka
1 year ago

பேருந்தில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை யாழ்ப்பாணம் - பூநகரி 15 ஆம் கட்டை சந்திப்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்திலிருந்து மல்லாவிக்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் சாவகச்சேரி பகுதியில் இருந்து குறித்த ஆசிரியர் ஏறியுள்ளார்.
பேருந்து பூநகரி பகுதியில் பயணித்துகொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறிய ஆசிரியர் பேருந்தின் பின்கதவால் கீழே விழுந்துள்ளார்.
இந்நிலையில் தலையில் பலத்த காயம் அடைந்த குறித்த ஆசிரியர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.



