பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

#SriLanka #strike
Mayoorikka
1 year ago
பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் தொழிற்சங்க  தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக அமைச்சு மட்டத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 நேற்றையதினம்(12) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஒரு சில தொழிற்சங்கத்தினர் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளுக்கு அமைய பணிப்புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

 புகையிரத தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் கம்பஹா-பென்முல்ல பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

 புகையிரத சேவை உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு பொது மக்களை அசௌகரியங்களுக்குள்ளாக்குகிறார்கள்.

 பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாது.

 பொது மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் வகையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக அமைச்சு மட்டத்தில் உரிய நடவடிக்கைகளை எடுங்கள்.இவர்களின் அரசியல் நிலைப்பாடுகளுக்காக அப்பாவி மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!