போராட்டங்கள் அதிகரித்து வருமானம் குறைந்தால் தன்னிச்சையாகவே சம்பளம் குறையும்! அரசாங்கம்
#SriLanka
#government
Mayoorikka
1 year ago
அரச துறையினரின் போராட்டங்கள் அதிகரித்து, அதனால் அரசாங்கத்தின் வருமானம் குறைந்தால், தன்னிச்சையாகவே அரச துறையினரின் சம்பளம் குறையும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் வைத்து அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இப்போது ஆர்ப்பாட்டம் நடத்துகின்ற தரப்புக்கு ஆதரவான குழுக்கள் ஆட்சியைப் பிடித்தாலும், நாட்டை 2 வாரங்களுக்கு மேல் நடத்திச் செல்ல முடியாது.
முன்னைய அரசாங்கங்களைப் போல இப்போது பணத்தை அச்சிட முடியாது. அதனை மீறி அச்சிட்டால் ஏனைய நாடுகள் இலங்கையைக் கைவிட்டுவிடும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன் கூறுியுள்ளமை குறிப்பிடத்தக்கது