வட மாகாணத்தில் இயங்கும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில் ஆளுநரால் அறிவுறுத்தல்கள்!

#SriLanka #NorthernProvince #Governor
Mayoorikka
1 year ago
வட மாகாணத்தில் இயங்கும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில் ஆளுநரால் அறிவுறுத்தல்கள்!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் சிறுவர் மற்றும் மகளிர் இல்லங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 குறித்த அறிக்கையில், யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் சிறுவர் மற்றும் மகளிர் இல்லங்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலும், பிரதேச செயலாளரின் விசாரணைக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட கள விசாரணை அறிக்கைக்கு அமைவாகவும், துறைசார் திணைக்கள ஆணையாளருக்கு கௌரவ ஆளுநரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. 

 இதன் தொடர்ச்சியாக ஆளுநரினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழு மீண்டும் களவிஜயம் மேற்கொண்டு ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 

 இந்த அறிக்கையின் பிரகாரம் சம்பந்தப்பட்ட இல்லம் ஒன்றில் கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றிய அறிவுறுத்தல்கள் உரிய திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

 வட மாகாணத்துக்குள் இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களும் உரிய ஒழுங்கு விதிகள் மற்றும் சட்டவரையறைகளைப் பின்பற்றி இயங்குவதை உறுதிப்படுத்தும் விதமான அறிவுறுத்தல் ஆளுநரால் தொடர்புடைய அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!